ரணில் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை!

திங்கள் ஜூலை 15, 2019

சிறிலங்கா  பிரதமரின் தலைமையில் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை என நீதியமைச்சர் தலதா அத்துகோரள ​தெரிவித்துள்ளார்.

எந்த வருடத்தில் சோபா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதென்பதை விரைவில் வெளிபடுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யார் சோபா ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். எந்த வருடத்தில் இதில் கைச்சாத்திட்டனர் என்று பயமின்றி கூறவுள்ளதாகவும் அமைச்சர் தலதா தெரிவித்துள்ளார்.