“ரணவிரு” பீரங்கி கப்பல் கடற்கரும்புலிகள் தாக்குதலினால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்ட நாள்!!

திங்கள் ஜூலை 19, 2021

முல்லைத்தீவு படைத்தளம் மீது 19.07.1996 அன்று மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள்–01 படை நடவடிக்கையில் இரண்டாம் நாள் சமரில் சிறீலங்கா கடற்படையின்“ரணவீரு”பீரங்கிக் கப்பல் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் செல்லப்பிள்ளை,மேஜர் கண்ணபிரான்,மேஜர் பார்த்தீபன்,மேஜர் பதுமன், மேஜர் சுடரொளி மற்றும் லெப்.கேணல் சேரன் உட்பட 112 மாவீரர்களின் 25 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

முல்லைத்தீவு படைத்தளம் மீது 18.07.1996 அன்று தொடங்கப்பட்ட “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கையில் படைத்தளத்தின் பெரும்பகுதி முதல்நாள் சமரில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் ‘ 19.07.1996 ‘ படைத்தளத்தின் எஞ்சிய பகுதிகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்த நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் சிறீலங்கா படைகளினால் கடல் மற்றும் வான் மூலமான மீட்பு அணிகளை தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு தளத்தில் தாக்குதலுக்குள்ளாகும் படையிருக்கு சூட்டாதரவை வழங்கிக் கொண்டு மீட்பு அணிகளை தரையிறக்கும் கடற்படை கலங்களிற்கு பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறீலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் பெரும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

இதன்போது “ரணவிரு” என்ற பீரங்கி கப்பல் கடற்கரும்புலிகள் தாக்குதலினால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது.

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111