ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா விஜயம்

செவ்வாய் சனவரி 14, 2020

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்நிலையில் வெளிவிவகார அமைச்சருடன் 42 பேர் அடங்கிய குழுவுடன் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். 


 அமைச்சர் சுசில் பிரேமஜயந்த , இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சிறிலங்காவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் தூதுவர் உட்பட பலர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றமை குறிப்பிடத்தக்கது