ரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2500-ஐ தாண்டியது

ஞாயிறு மே 17, 2020

 ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 47 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3 லட்சத்து 12ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் ரஷ்யா நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிலையில், தற்போது அங்கு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,72,043 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இன்று 119 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2,537 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் அங்கு கொரோனா தொற்றில் இருந்து 63,116 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா 3-வது இடத்தில் உள்ளது.