ரஷ்யாவில் பன்றிகளுக்கு இரையான பெண்!!

வெள்ளி பெப்ரவரி 08, 2019

ரஷ்யாவின் உட்மர்ட்டியா என்ற முக்கிய கிராமமொன்றில் பன்றிகள் பண்ணையில், தவறுதலாக விழுந்துவிட்ட ஒரு பெண்ணை பன்றிகள் சாப்பிட்டு விட்டதாக ரஷ்ய ஊடகமொன்று தகவல்க்ள வழங்கியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விலங்குகளுக்கு உணவளிக்க தனது வீட்டை விட்டு வெளியே வந்த 56 வயதான விவசாய பெண்ணே இவ்வாறு பன்றிகளுக்கு இரையாகியுள்ளார்.குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் அல்லது அவர் மயக்கமடைந்து இருக்கலாம் எனவேதான் அவர் இவ்வாறு பன்றிகளின் கூட்டிற்குள் தவறி விழுந்திருக்கலாமென என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்தப் பெண்ணின் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சம்பவம் நடந்த தினத்தன்று நேரத்துடன் உறங்கியுள்ளார். பின்னர் காலையில் விழித்த அவர் தனது மனைவியை வீட்டில் காணவில்லை என்பதால் தேடியுள்ள நிலையிலேயே குறித்தப் பெண் இறந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.

மேலும், அதிக அளவிலான இரத்த இழப்பினாலேயே அவர் இறந்திருக்கக் கூடுமென, அவரின் கவணர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.