ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு கருவி! இந்தியா மீது பொருளாதார தடை? அமெரிக்கா எச்சரிக்கை-

செவ்வாய் சனவரி 05, 2021

ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு கருவி வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

தரைபரப்பில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது ர‌ஷ்யாவின் ‘எஸ் 400’ ஏவுகணை தடுப்பு கருவி.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ர‌ஷ்யாவிடம் இருந்து ஐந்து ‘எஸ்400’ ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க இந்தியா சுமார் ரூ.36 ஆயிரத்து 617 கோடி அளவில் ஒப்பந்தம் போட்டது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையும் விடுத்தது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்காத இந்தியா முதல் கட்டமாக எஸ்400 ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க ரூ.5,843 கோடி ர‌ஷ்யாவிடம் இந்தியா வழங்கியது.

ர‌ஷ்யாவிடம் இருந்து ‘எஸ் 400’ ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்கினால், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படலாம் என அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சி பிரிவான நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.