ரூ20 லட்சம் பணத்திற்காக போலி என்கவுண்டர்! இராணுவ கப்டன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்-

திங்கள் சனவரி 11, 2021

கடந்த ஆண்டு ஜூலை மாதம், ரூ20 லட்சம் பரிசுத்தொகைகாக "போலி என்கவுண்டர்" நடத்தப்பட்டதாக பொலிசார் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்ட அம்ஷிபுராவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த "போலி என்கவுன்ட்டரில்" இம்தியாஸ் அகமது, அஃப்ரார் அகமது, முகமது இப்ரார் என்ற மூன்று இளைஞர்கள் பயங்கரவாதிகள் என்று இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். 

மேலும் இந்த "என்கவுன்ட்டர்" போலியானது என்றும், ரூ.20 லட்சம் பரிசுத் தொகைக்காகவே இது நடத்தப்பட்டது என்று பொலிசாரின் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது "போலி என்கவுன்ட்டர்" என்றும் இந்த இளைஞர்களுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக இராணுவமும் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதில் கப்டன் தன் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக பிலால் அகமது லோன் தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். கப்டன் புபேந்தர் இப்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். பொலிசார் மாவட்ட தலைமை நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், இராணுவ கப்டன் புபேந்தர் "போலி என்கவுண்ட்டர்" நடத்தியதாக பரபரப்பு குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் இவர் மீது துரை ரீதியாக ராணுவ நீதிமன்றம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிய வருகிறது.