ரவூப் ஹக்கீம் நடிகர் சத்தியராஜ் சந்திப்பு!!

திங்கள் ஜூன் 10, 2019

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தென்னிந்திய சினிமா பிரபலமான நடிகர் சத்தியராஜை சந்தித்து பேசியுள்ளார். தமிழர் எழுச்சி நாள் கலைஞர் உதயம் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ரவூப் ஹக்கீம் சென்னைக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த நிலையில் அனிதா மேல்நிலை பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே நடிகர் சத்தியராஜை, ரவூப் ஹக்கீம் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த நிகழ்வில் மலேசிய சபாநாயகர் எஸ்.ஏ.விக்னேஷ்வரன், கவிப்பேரரசு வைரமுத்து, சாலமன் பாபையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட உரையாற்றியிருந்ததோடு, ரவூப் ஹக்கீமும் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

அத்துடன் தனது இந்த பயணத்தின் போது ரவூப் ஹக்கீம், தி.மு.கவின் தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.