ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள் நடாத்திய பொங்கு தமிழ் பொங்கல் விழா!

வியாழன் பெப்ரவரி 14, 2019

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழர்கள்  நடாத்திய  பொங்கு தமிழ் பொங்கல் விழா10.02.2019 அன்று ஞாயிற்றுக் கிழமை ஸ்ராஸ்பூர்க் Salle des fêtes de la Bourse மண்டபத்தில் காலை 10.30மணி அளவில் ஆரம்பமாகியிருந்தது.

வழமைபோன்று பகலவனுக்கு பொங்கல் பொங்கி படைக்கும் நிகழ்வை திரு. சாந்தன் தம்பதியினர் நடாத்தியிருந்தனர்.

பிரதமவிருந்தினர்களாக ஸ்ராஸ்பூர்க் மாநகரமேயர் சார்பாக சூசான் கெம்வ் அவர்கள், பாராளுமன்ற ஆலோசனை உறுப்பினர் திரு.மோறர் அவர்கள், அருட்தந்தை கலான் அவர்கள், பக்தி மந்திர் அமைப்பின் தலைவர் திரு. குப்தா அவர்கள், முலூஸ் நகர உறவுகள், பெல்ஜியம் நகர தமிழ் உறவுகள்  பொங்கு தமிழ் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், பாடல்கள், நாடகங்கள், கவிதை அரங்கம், வில்லுப்பாட்டு போன்ற கலை, கலாச்சார, பண்பாட்டு நிகழ்வுகள் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

அதேவேளை பாரீஸ் நகரம் சென்று திருக்குறள் போட்டிகளில் பங்கு கொண்டு, வெற்றிபெற்ற  மாணவர்களுக்கு கேடயமும், மற்றும் சான்றிதழ்களும், பதக்கங்களும் கொடுக்கப்பட்டன. அத்துடன் ஆசிரியரகள்; மதிப்பளிப்பு நிகழ்வும் இடம் பெற்றிருந்தது.

மண்டபம் நிறைந்த மக்கள் இப்   பொங்கு தமிழ் பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் இனிதே பொங்கு தமிழ் பொங்கல் விழா  நிறைவுக்கு வந்தது..

f