ஸ்ரீ ஜெயவர்தனபுர 37 ஏக்கர் காணியை குத்தகைக்கு வழங்க அனுமதி

புதன் செப்டம்பர் 22, 2021

 ஸ்ரீ ஜெயவர்தனபுர பகுதியில் அமைந்துள்ள 37 ஏக்கர் காணி நிலத்தைத் தனியார் நிறுவனத்திற்கு மாற்ற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்ரீ ஜெயவர்தனபுர மாதிவெல ‘கொழும்பு பறவைகள் தோட்டம்’ திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

அதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 37 ஏக்கர் காணி நிலத்தைத் தனியார் நிறுவனத்திற்கு 30 ஆண்டு களுக்குக் குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கி யுள்ளது.

 சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த யோசனை முன்வைக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.