தைப் பொங்கல் நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்றஉறுப்பினர்கள் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் எனஅறைகூவல்!

வெள்ளி சனவரி 17, 2020

பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையின்(BTF) ஏற்பாட்டில் வருடா வருடம் இடம் பெறும் தைப் பொங்கல்நிகழ்வு தை மாதத்தினை "தமிழ் மரபுத் திங்கள்" (Tamil Heritage Month) என பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கருப் பொருளைமுன்வைத்து ஜனவரி 14ஆம் தேதி அன்று இடம் பெற்றது. அங்குகலந்து கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்பாரம்பரிய தமிழ் உடைகள் அணிந்து விழாக்களில் கலந்துகொண்டு தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைகௌரவப்படுத்தியதுடன் தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம் எனஉறுதியளித்தனர்.

i

தைப்பொங்கல் என்பது இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா உட்பட்ட தமிழ் புலம்பெயர்ந்தமக்களாலும் தமிழ் சமூகத்தால் கொண்டாடப்படும் விழா. “தைப்பொங்கல்’ திருநாள்  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழையடிவாழையாக தொடர்கின்றது.

i

தமிழ் என்பது இந்தியா, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒருமொழி. இது 7.5 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கான முதல்மொழியாகவும் ஏறத்தாழ 6 இலட்சம் மக்களுக்கு இரண்டாவதுமொழியாகவும் உள்ள உலகின் மிகப் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகும். தற்போது. கி.மு 300 முதல் கி.பி 100 வரைபயன்படுத்தப்பட்ட தமிழின் ஆரம்ப வடிவங்களில் ஒன்றான பிராமிஎழுத்துக்களில் எழுதப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் இலங்கையிலும்தாய்லாந்து மற்றும் எகிப்தில் உள்ள வர்த்தக பொருட்களிலும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

i

தமிழர்கள் சிறந்த கட்டிடக் கலைக்கு உரித்துடையவர்கள். கி.பி1011 இல் பேரரசர் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர்பிரஹதிஸ்வரர் ஆலயம் அவரது பேரரசின் பிரமாண்டத்திற்கோர்எடுத்து காட்டாக வடிவமைக்கப்பட்டது. ஆடல், பாடல், பரதநாட்டியம், தமிழ் இசைக் கருவிகளான மிருதங்கம், நாதஸ்வரம், தவில், வயலின், வீணை என்பன தமிழர்களின்செழுமையான கலை, பண்பாட்டு வடிவங்களின் முக்கியஅம்சங்களாகும். உலகமயமாக்கலிற்குத் தாக்குப் பிடித்து கலை, இலக்கியம், பண்பாடு, போன்ற தம் பாரம்பரியங்களைநவீனமயப்படுத்தி பேணுவதுடன் உயிர் வாழும் செம் மொழியாகதமிழை நிலைநிறுத்தி இந்த விழுமியங்களை எதிர்காலதலைமுறைக்கு தமிழர்கள் கையளிப்பது போற்றுதலுக்கு உரியது.

நிகழ்வு இடம்பெற்ற பாராளுமன்ற மண்டபம் கரும்பு, வண்ணமயமான ‘கோலம், கலைப் படைப்புகள், இசைக்கருவிகள், பொங்கல் பானை என்பனவற்றால் அலங்கரிக்கப்பட்டு தமிழ்மக்கள் போற்றும் பாரம்பரியதின் பிரதிபலிப்பாக அமைந்திருந்தது. தமிழ் பள்ளி மாணவர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் நடனக்கலைஞர்கள் தமிழரகள் பேணிக் காக்கும் விழுமியங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் அற்புதமான நிகழ்ச்சிகளை நடத்தினர். 

தைப் பொங்கலை நாம் கொண்டாடும்போது, இலங்கையில் 30 ஆண்டுகால இனப்படுகொலைக்கான நீதி, பொறுப்புக் கூறல்மற்றும் அர்த்தமுள்ள அரசியல் தீர்வுக்காக பாதிக்கப்பட்ட தமிழ்சமூகம் இன்னும் காத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்வதுஅவசியம் என்பதனை அங்கு வருகை தந்திருந்த பாராளுமன்றஉறுப்பினர்கள் மூலம் வெளிக் கொண்டு வரப்பட்டது ஒரு முக்கியவிடயமாகும். 

கரேத் ஜான்சன் எம்.பி (Gareth Johnson MP), கெளரவ எட் டேவிஎம்.பி (Rt Hon Sir Ed davey MP), கரேத் தாமஸ் எம்.பி (Gareth Thomas MP), கெளரவ ராபர்ட் ஹால்பன் எம்.பி (Rt Hon Robert Halfon MP), போல் ஸ்கல்லி எம்.பி (Paul Scully MP), சர் டேவிட்அமெஸ் எம்.பி (Sir David Amess MP),