தைப்பொங்கல் விழா தமிழர்களின் மிகப் பெரிய அடையாளமாகக் கருதப்படுகிறது - நோர்வேப் பிரதமர்

வெள்ளி சனவரி 15, 2021

நோர்வேயில் வாழும் தமிழர்கள் உட்பட இலங்கை இந்திய மற்றும் உலலெங்கும் வாழும் தமிழர்கள் கதிரவனுக்கும், உழவனுக்கும் நன்றி கூறும் பாரம்பரியத்தைக் கொண்ட உங்களைச் இணையத்தோடு உறவாடும் இந்த வருடத்தில், சந்திக்கத் கிடைத்த வாய்ப்பிற்கு எனது மனமாந்த நன்றிகள் தெரிவிப்பதாக  நோர்வேப் பிரதமர் மதிப்பிற்குரிய ஆர்னா சூல்பேர்க் அவர்கள் நோhர்வேத் தமிழர்களுக்கு அன்னை பூபதி கலைக்கூட உறுப்பினர்களுக்கு வழங்கும் தைத்திருநாள் 2021 ஆம் ஆசியுரை கூறியுள்ளார். 

இந்த நாட்களில் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றனர். இது தமிழர்களால் மிகப் பெரிய அடையாளமாகக் கருதப்படுகிறது.

இவ்வாறான விழாக்கள் பரம்பரை பரம்பரையாகக் குடும்பங்களையும் நண்பர்களையும் ஒன்றிணைக்கும் நல்லதோர் சந்தர்ப்பமாகப் பேணப்படுவதை நாமறிவோம். ஆயினும் இவ்வருடமானது வழமை போன்றல்லாது மிகவும் நெருக்கடியானது. கொரோனா வைரசின் தாக்கத்தல் தற்போதய பனிக்காலம் முற்றிலும் மாற்றத்திற்கு உள்ளாகியதுடன், களநிலவரம் மிகவும் பாரதூரமாகவும் உள்ளது.
 
நோய்த்தொற்றானது மிகவும் சடுதியாகப் பரவுவதால் இறுக்கமான நடைமுறைகளைக் கையாள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நோய்த் தொற்றால் ஆபத்தான கட்டத்தை நெருங்கக் கூடியவர்களைப் பாதுகாக்கவும், அனைவருக்கும் தேவையான மருத்துவமனை மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்க ஆவண செய்ய வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது.

இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் அன்னை பூபதி தமிழ்க்கலைக் கூடத்தினர் தமது செயல் வடிவத்தை இணையமுற்றம் மூலம் செயற்திறன் மிக்கதாக உருமாற்றியதை நான் அறிவேன். தற்போது இணைய வழியிலேயே சிறார்களுடனும் இளைஞர்களுடனும் தகவல்கள் மற்றும் தொடர்புகள் வேணப்படுகிறது. மிகக் குறுகிய கால இடைவெளியில் தங்கள் வளாகங்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் துணையுடன் அண்ணளவாக 1800 உறுப்பினர்களை  உள்வாங்கி அவர்களை வுநயஅள தீம்ஸ்யில் இணைத்துள்ளீர்கள். இது மிகவும் வியப்பிற்குரிய மாற்றமாகும்.

இச்செயற்பாடே சிறார்களையும் இளைஞர்களையும் வளர்ந்தவர்களோடு இளைக்கும் சக்திவாய்ந்த சமூக அரங்கமாகச் தொழிற்படத் தூண்டுகிறது. அத்தோடு தங்கள் நடவடிக்கையானது அனைவரையும் சமூகமான உளவள ஆரோக்கியத்துடன் வாழ வழிசமைக்கும்.

மேலும், இந்நாளில் நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியப் பெருந்தகைகள், தன்னார்வலப் பணியாளர் அனைவரினதும் சிறப்புப் பணிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்து நிற்கிறேன். இத் தைப்பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடி மகிழ உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.