தாய் மற்றும் மகள் மீது துப்பாக்கிச் சூடு!

செவ்வாய் சனவரி 14, 2020

வரக்காபொல ;கணேகம ;பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  குறித்த துப்பாக்கிப் பிரயோகம், தாய் மற்றும் மகள் மீது மேற்கொள்ளப்பட்ட நிலையில், 22 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாகவும் காவல் துறையினர்  தெரிவிக்கின்றனர்.

 மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் தாய் படுகாயமடைந்த நிலையில், வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
 இந்த சம்பவம் இன்று (14.01.2020) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.