தாயக விடுதலைக்காக இலட்சியப் பற்றோடு செயல் வீரன் பவுஸ்ரின்

திங்கள் மார்ச் 18, 2019

தாயக விடுதலைக்காக இலட்சியப் பற்றோடு செயல் வீரனாய் இடையறாது உழைத்துவந்த திரு. அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்கள் , பிரான்சில் 15/03/2019 வெள்ளிக்கிழமை அன்று சாவடைந்தார் என்னும் துயரச் செய்தி, எம் நெஞ்சங்களைப் பதறவைத்துள்ளது.

இவர் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மூத்த செயற்பாட்டாளரும் ஆவார்.

சிரித்தமுகமும் அன்புணர்வுடன் கூடிய பேச்சும், எல்லோருடனும் இணக்கமுடன் நடந்து கொள்ளும் பண்பும் பாங்கும் இவரை எல்லோரினதும் அன்புக்குரியவராகத் திகழச்செய்துள்ளது. மக்கள் போராட்டக்களங்களிலும் விழாக்களிலும் மக்கள் தொண்டனாய் அர்ப்பணிப்போடு ஓடியோடி உழைத்தவர். புலம் பெயர் தேசத்தில் இருந்து கொண்டு, எந்த நிலை வந்தபோதும் தாயகப்பணியை, தேசியத் தலைவன் காட்டிய நேரியவழியில் உறுதியோடு இறுதிவரை உழைத்து ஏனையவர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார். அவருக்கு எமது இறுதி வணக்கத்தை தாயக உணர்வுடன் செலுத்துகின்றோம்.

அன்னாரின் பிரிவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு.