தாயகப்பகுதியில் மாவீரர்களின் துயிலும் இல்லம் சுத்தம் செய்யும் பணிகள்

வியாழன் நவம்பர் 21, 2019

தமிழர் தாயகப் பகுதியில் கார்த்திகை மாதம் பிறந்து விட்டால் தமிழர்களின் காவல்தெய்வங்களை நினைவுகூறுகின்றனர். 

im

ஆக்கிரமிப்புப் படைகளினால் சேதப்படுத்தியுள்ள மாவீரர்கள் உறங்கும் இடங்கள் தாயகப்பகுதியில் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகிறது.

img

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் தரவையில் அமைந்துள்ள மாவீரர்களின் துயிலும் இல்லம் சுத்தம் செய்யப்பட்டது.

img

அதேபோன்று வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று   யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் துப்புரவுப் பணிகள் பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டது.

img

இதேவேளை, எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் செய்யப்படுகிறது. செய்யப்பட்டுள்ளது. (கொற்றாவத்தை நாச்சிமார் கோவிலுக்கு அருகில் உள்ள தோட்டத்தில்)