தேச துரோக வழக்கை திரும்ப பெறுக-வைகோ

ஞாயிறு அக்டோபர் 06, 2019

வன்முறையை தடுக்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக நீதிமன்ற உத்தரவுப்படி 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்திருப்பதை திரும்ப பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-கூறியிருப்பதாவது பெரும்பாலான மக்கள் போற்றும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்தை, போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

மேற்கண்ட வன்முறைத் தாக்குதல்கள் குறித்து, நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்டனத்தைப் பதிவு செய்தீர்கள். ஆனால், அது மட்டும் போதாது. ‘ராம்’ என்கின்ற பெயர், இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு மிகவும் புனிதமானது.

அந்தப் பெயரை வன்முறைக்காகப் பயன்படுத்தப்படுதைத் தடுக்க வேண்டும்; அதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

இது தொடர்பாக பிரதமருக்கு இந்தக் கடிதம் தீட்டிய அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் 49 பேர் மீது புகார் கூறி, சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், பிகார் மாநில காவல்துறை பிரதமருக்கு மடல் தீட்டிய 49 பேர் மீதும் தேசத்துரோகம், பொதுத்தொல்லை, மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் சமாதானத்தை மீறும் நோக்கத்துடன் அவமதிப்பது உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஜனநாயக நாட்டில், கருத்து உரிமையை பறிப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுவோரை ‘தேசத்துரோகிகளாக’ சித்தரிப்பதும் பாசிசத்தின் அடையாளம் ஆகும். இத்தகைய போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும்.

அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.