தேசிய பூங்காவிற்கு என காரணம் கூறி நெடுந்தீவில் காணி சுவீகரிப்பு!

திங்கள் செப்டம்பர் 21, 2020

நெடுந்தீவில் வன ஜீவராசிகள் திணைக்களம் தேசிய பூங்காவிற்கு என பல ஏக்கர் காணிகளை சுவீகரித்துள்ளதால் தாங்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர் என அங்குள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

அரச காணிகளும் தனியார் காணிகளும் மேற்படி சுவீகரிப்பிற்குள் அடங்கியுள்ளன. சுவீகரிக்கப்பட்ட காணிகளே இதுவரை தமது கால்நடைகளின் மேய்ச்சல் தரவையாக இருந்தன எனவும் தற்போது அங்கு கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்வதற்கு கூட அனுமதிக்கிறார்கள் இல்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சுவீகரிக்கப்பட்ட தனியார் காணிகளின் உரிமையாளர்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி எடுத்து வருகின்றனர் எனவும் தெரியவருகின்றது. 

இந்த விடயம் தொடர்பாக நெடுந்தீவு மக்கள் பிரதேச செயலரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.