தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வாரா ரணில்?

சனி ஓகஸ்ட் 08, 2020

ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றம் செல்வாரா என்ற கேள்வி கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது

ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள கட்சியின் பொதுசெயலாளர் அகிலவிராஜ் காரியவசம் திங்கட்கிழமை இது குறித்த இறுதிமுடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை தோல்வியடைந்த வேட்பாளர்களை தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அனுப்பும் பாரம்பரியம் கட்சிக்கு இல்லை என வஜிரஅபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லமாட்டார் தோல்வியடைந்த பின்னர் நாடாளுமன்றம் செல்பவரில்லை அவர் என கட்சியின் அமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.