தேசியத் தலைவரின் எண்ணத்திற்கமைய செயற்பட்ட மொழிபெயர்ப்புப் படைப்பாளி

செவ்வாய் ஜூன் 29, 2021

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளியும்,  மிகச் சிறந்த போர்க்கால மொழிபெயர்ப்புப் படைப்பாளருமான வின்சன்ற் புளோரன்ஸ் யோசெப் (அருளாளன்) அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்!

“தாயகம் நோக்கிய பயணம்” (இஸ்ரேல் உருவான கதை), “மூடுபனிக்குள் ஒரு தேடல்” (உளவியல் நாவல்), “சன்சூவின் போர்க்கலைகள்” (சீனாவின் போர்த் தந்திரங்கள்) உட்பட்ட 82 நூல்களை மொழிபெயர்ப்புச் செய்த அனிஞர் இவராவார்!

தேசியத் தலைவரின் எண்ணத்திற்கமைய “உலக இலக்கியங்கள், வரலாறுகளைப் படிக்க வேண்டும்! அவ்வழி பெற்ற அறிவைக் கொண்டு வரலாற்றைப் படைக்க வேண்டும்! “ என்ற அறிவுத் தேடலிற்கு இவரைப் போன்ற மொழிபெயர்ப்புப் படைப்பாளிகள் தேடித்தந்த ஊட்டம் ஏராளம்!