தேசத்தை நேசித்த நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை (அக்காச்சி) !

வெள்ளி ஜூன் 12, 2020

தமிழீழ தேச விடுதலையை நேசித்து இலட்சிய உறுதியுள்ள தமிழராகத் தன்னை அடையாளப்படுத்தி   டென்மார்க் கிளையின்  Viborg நகர செயற்பாட்டாளராகவும் , 84 ஆம்  ஆண்டு காலப் பகுதியில்  முன்னாள் போராளிகளில் ஒருவருமான  செல்வராசா பொன்னுத்துரை (அக்காச்சி) அவர்கள் 08.06.2020 காலை மாரடைப்பு காரணமாக  சாவடைந்துள்ளார்.  இவர்  Viborg நகர மாலதி தமிழ்க் கலைக்கூட ஆரம்பகால நிர்வாக உறுப்பினர்களில் ஒருவராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.

t

2009ஆம் ஆண்டு மே மாத நடுப்பகுதியில் எமது ஆயுதப்போராட்டம் மௌனித்த பின்பும், இவரது பணி ஓய்வடையவில்லை. தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத்  தன்னாலான தொடர்பணிகளை ஆற்றி வந்தார்.  தாயக விடுதலைப்பற்றும் தமிழ்மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்கின்ற அவாவும் கொண்டு முன்னின்று உழைத்த அற்புதமான மனிதரை இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.  அவர்களுக்கு வணக்க நிகழ்வு இன்று 11.06.2020 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு Viborg  நகரில் அகவணக்கத்துடன் நடைபெற்றது.

y

 வணக்க நிகழ்வில், டென்மார்க் கிளை,  உப கட்டமைப்புகள்  வெளியிடப்பட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் கோண்டாவில் வடக்கை பிறப்பிடமாகவும் டென்மார்க்கில் தற்காலிக வாழ்விடமாகவும் கொண்டிருந்த  நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை (அக்காச்சி)  அவர்கள், டென்மார்க் கினளயின் பல்வேறு பணிகளையும் தன் தோள் மீது சுமந்து, தேச விடுதலைப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்.

t
 
இவரன் கனவுகளைச் சுமந்தபடி நாம் தமிழீழ விடுதலையை  நோக்கி பயணிப்போம் என்று இந்த வேளையில் மீண்டும் உறுதியெடுத்துக்கொள்கின்றோம்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.