“ தேசத்தின் குரல் ” அன்ரன் பாலசிங்கத்தின் 13ஆம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு!

திங்கள் டிசம்பர் 16, 2019

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 13ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு இன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் நினைவுதிரு நவரட்ணம் நிக்சன் கிருமாறன் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் . தமிழீழ தேசிய கொடியினை செல்வி சாமினி இராஜநாதன் ஏற்றிவைத்தார்கள் . ஈகைச்சுடரினை        சு.ப ஈஸ்வரதாசன் அவர்கள் ஏற்றி வைத்ததை தொடர்ந்து திருஉருவத்திற்க்கான மலர்மாலையை திரு சுதன் அவர்கள் அணிவித்தார்கள் .

நினைவு சுமந்த கவிதைகள் , எழுச்சி நடனங்கள் மற்றும் எழுச்சி பாடல்களை தொடர்ந்து, தலைவரின் வழிகாட்டலில் தமிழீழம் நோக்கிய எங்களுடைய பயணம் தொடரும் என்ற உறுதிமொழியோடு வீரவணக்க நிகழ்வானது நிறைவு பெற்றது .