தேனீ எடுப்பவர்களுக்கு உடல் சோர்வும்,தேனீக் கடியும் மிச்சம்!!

வெள்ளி சனவரி 01, 2021

தேனீ வளர்ப்பும்,தேன் எடுப்பதும் மிகவும் சிக்கலான தொழில்.அந்த சிக்கலில் பாதியைக் குறைக்க, ரோபோவை பயன்படுத்தலாம் என்கிறது, தென்கொரியாவை சேர்ந்த, 'டேசுங்' என்ற நிறுவனம்.டேசுங், தயாரித்துள்ள 'ஹைவ் கண்டரோலர்' என்ற ரோபோவை, ஒரு தேனீ பெட்டியின் மூடியை திறந்து, பெட்டியின் மேல் வைத்துவிடவேண்டும்.

பிறகு, அந்த ரோபோவே மெதுவாக பெட்டிக்குள் உள்ள தேன்கூட்டு சட்டங்களை ஒவ்வொன்றாக எடுத்து, தேனீக்களை விரட்டி, தேனை வடித்து எடுத்துவிட்டு மீண்டும், பெட்டிக்குள் வைத்துவிடும்.

இந்த ரோபோவால், 90 சதவீதம் ஆட் கூலியும், 75 சதவீத நேர விரயமும் மிச்சமாவதாக டேசுங் நிறுவனத்தின் இணையதளம் தெரிவிக்கிறது. தேனீ எடுப்பவர்களுக்கு உடல் சோர்வும், தேனீக் கடியும் மிச்சம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.