தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!

வியாழன் ஜூலை 11, 2019

மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் அளித்துள்ள பதிலில், தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

நியூட்ரினோ ஆய்வு மையத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் உறுதி அளித்துள்ளார்.  இந்த ஆய்வகத்தால் எந்த கதிர்வீச்சு அபாயமும் ஏற்படாது எனவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்படும் ஆய்வகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  2 கி.மீ தூரத்திற்கு மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது. நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது என்று மத்திய அணுசக்தித்துறை தெரிவித்துள்ளது.