டெங்கு நோய் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்!

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாகவும், விசேடமாக கொழும்பு,கம்பஹா,களுத்துறை, காலி,மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் டெங்கு நிலைமை அதிகமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டிருக்கும் டெங்கு அச்சுறுத்தலை கட்டுப்படுத்த சுகாதாரம்,போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு தேசிய டெங்கு தடுப்பு பிரிவுடன் இனைந்து நாட்டில் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.இந்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு திட்டங்களை ஆக்கபூர்வமானதாக முன்னெடுப்பதன் மூலம் டெங்கு நோயை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது