டெங்கு பரவும் அபாயம்

வெள்ளி செப்டம்பர் 18, 2020

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக டெங்கு காய்ச்சல் தொடர்பான அவதானம் மக்கள் மத்தியில் குறைந்துள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடும் மழையுடன் டெங்கு பரவக்கூடும் என்பதால் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா ஆபத்து காரணமாக பொது மக்கள் டெங்கு காய்ச்சலை மறந்துவிட்டதாக அதன் உறுப்பினர் வைத் தியர் பிரசாத் கொலம்பகே சிங்கள ஊடகத்தில் தெரிவித் துள்ளார்.

கடந்த சில மாதங்களில் நாட்டில் கொரோனா தொற்று பர வலால் 13 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாகப் பதிவாகி யுள்ளது.

ஆனால் டெங்குகாய்ச்சல் பரவல் அதிகரித்தால், உயிரிழப் போர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கக்கூடும் என வைத்தியர் பிரசாத் கொலம்பகே சுட்டிக்காட்டினார்.