டென்மார்க் கற்பக விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வழிபாடு

ஞாயிறு மே 15, 2022

டென்மார்க் Naestved கற்பக விநாயகர் ஆலயத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை 07.05.2022 அன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் வழிபாடு மிகவும் எழுச்சியுடன் நடந்தேறியது. பொதுமக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஏராளமான மக்கள் பங்குகொண்டு உணர்வுபூர்வமாக இனப்படுகொலையில் சாவடைந்த பொதுமக்களுக்கும் மற்றும் மாவீரர்களுக்குமான சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இவ்வேளையில் ஆலயத்தில் விளக்கேற்றி பொதுப் பிரார்த்தனை பாடல்கள் பாடப்பட்டு மனமுருகி மக்களால் வணக்க நிகழ்வு நடந்தேறியது.