டென்மார்க் நூலகத்தில் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் கண்காட்சி !

புதன் மார்ச் 27, 2019

டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் ஆவணக்
கண்காட்சிகள்  Skjern  நூலகத்தில் 25.03.19 தொடக்கம் 04.04.19வரை வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளையும்,ஆக்கிரமிப்புகளையும் இக்
கண்காட்சி  டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்தாங்கி நிற்கிறது. அத்துடன் தமிழர்களின் வாழ்வியல் முறைகளை எடுத்துக்காட்டும்.

பொருட்கள்,கலை கலாச்சார பண்பாட்டு பதிவுகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழர் தேசம் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருவதை டெனிஸ் மக்களுக்கும் மற்றைய இன மக்களுக்கும் எடுத்துரைக்குமுகமாக Grenaa நகரில் உள்ள நூலகத்தில் கண்காட்சி நடைபெறுகின்றது.

தாயக விடுதலைக்காக விலைமதிப்பற்ற அர்ப்பணிப்புகள் செய்த எமது மக்களையும் ,மாவீரர்களின்
தியாகங்களையும் பேணிக்காக்க வேண்டியது எங்களுடைய கடமையாகும்.