டென்மார்க் றணஸ் நகர தேவாலயத்தில் நடைபெற்ற முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு

சனி மே 21, 2022

கடந்த 18.05.2022 அன்று றணஸ் நகர தேவாலயத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், இனழிப்பில் கொல்லல்பட்ட அனைத்து மக்களுக்குமான  நினைவேந்தல் திருப்பலி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

 இத்திருப்பலி ஆராதனையானது தமிழில் நடைபெற்றத்ததோடு, அதிலும் மிகச்சிறப்பம்சமாக முள்ளிவாய்க்கால் களத்தில் இறுதிவரை நின்று தனது பணியை செய்த, அருட்தந்தை றெஜி அவர்கள் தனது கள அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது.

இறுதியாக எல்லோருக்கும் முள்ளிவாய்கால் நினைவுக் கஞ்சி வழங்கப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.