டென்மார்க் தலைநகரில் மாபெரும் பேரணி!

திங்கள் மே 20, 2019

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆவது ஆண்டில் டென்மார்க் தலைநகரில் டெனிஸ் பாராளுமன்ற முன் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி மாபெரும் பேரணி நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என எந்தவித வேறுபாடும் இன்றி தமிழன் என்ற காரணத்தினால் இரத்த வெறி பிடித்த சிறீலங்கா அரச பயங்கரவாதம் எம் உறவுகளை கொத்துக்கொத்தாய் கொன்று குவித்தது.

எம் இதயச்சுவர்களில் வலிகளால் பதியப்பட்ட நாட்களை நினைவு கூர்ந்து உறங்கிக்கிடக்கும் சர்வதேசத்தின் மனச்சாட்சிகளை மீண்டுமொரு முறை தட்டிஎழுப்பினர்.