டென்மார்க்கில் தமிழ் இளையோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனப் பேரணி!

திங்கள் பெப்ரவரி 15, 2021

டென்மார்க்கில் உள்ள இரு பெரிய நகரங்களான Aarhus மற்றும் Odense நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பினரால் (13.02.2021)  அன்று தமிழ் தேசியதிற்கு வலுச்சேர்க்கும் வகையில் வாகனப் பேரணிகள் நடைபெற்றது.

h

தாயகத்தில் இடம்பெற்ற பொத்துவில் தொடங்கிபொலிகண்டி வரையான தமிழ்த் தேசிய பிரகடனப் பேரணிக்கு வலுச்சேர்க்கவும்இ யெனீவா ஐ.நா. மனிதவுரிமை மீறல் ஆணையத்தில் 46 ஆவது கூட்டத்தொடரில்  இடம்பெறவுள்ள ஈழத்தமிழர் பிரச்சனை சம்மந்தமாக வருகின்ற மார்ச் மாதம்  நடைபெற இருக்கும் விவாதத்தை முன்னிட்டும்இ இந்தக் கொட்டும் பனியிலும்  22 ஆவது தடவையாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்  ஐ.நா. நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் டென்மார்க்கில் மேற்கூறப்பட்ட நகரங்களில் இன்று வாகனப்பேரணிகள் மிகவும் எழுச்சியாக நடைபெற்றது . இதற்கு உள்ளூர் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு இருந்தன.

j