தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை ஓகஸ்டில்!

ஞாயிறு ஜூலை 21, 2019

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை வெளியிடுவதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்வரும் 24 ஆம் திகதி முற்பகல் 10.30 முதல் மாலை 6.30 வரை சாட்சி பதிவுகள் இடம்பெறவுள்ளன.