தெற்கு அதிவேக பாதை நாளை திறப்பு!

சனி பெப்ரவரி 15, 2020

தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி வாகன போக்குவரத்திற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு சிறிலங்கா   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  சிறிலங்கா பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இந்த வீதி முழுமையாக திறக்கப்படும் என வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர்ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.