தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

புதன் நவம்பர் 13, 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில் நாடு முழுவதும், தேர்தல் சுவரொட்டிகள் மற்றும்  பதாதைகளை அகற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதே வேளை பணம் செலுத்தி அரசியல் விளம்பரங்களை தனது சமூக ஊடக பயனாளர்களிற்கு காண்பிப்பதை நிறுத்துமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் பெப்ரல் அமைப்பு கோரியுள்ளது.தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில், குறித்த விடயத்துக்கு  பேஸ்புக் நிறுவனமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் பெப்பரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.