தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து அரசியல் பிரமுகர்கள் யாழ். மத்திய கல்லூரியில் முகாமிட்டுள்ளனர்

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று (05) நடைபெற்று முடிவுகள் எண்ணப்பட்டு, பிற்பகல் 2.30 மணிக்கு பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் போட்டியிட்ட அரசியல் பிரமுகர்கள் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

e

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலுள்ள மத்திய நிலையத்தில் இன்று (06) காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

e

இம்முறை பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம் தொடர்பாகப் பெரும் எதிர்பார்ப்பு பல மட்டங்களிலும் உருவாகியுள்ளது.

e

இந்த நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் தேர்தல் முடிவுகளுக்காக வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் நீண்டநேரமாக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

e

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவத் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான மணிவண்ணன், சுகாஸ் மற்றும் ஆதரவாளர்களும் தற்போது யாழ். மத்திய கல்லூரியில் காத்திருக்கின்றனர். 

e
 

e