தேர்தலை பிற்போடவேண்டும்....

திங்கள் ஜூலை 13, 2020


கடந்த சில நாட்களில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதால் தேர்தலை பிற்போடவேண்டும் என்ற கோரிக்கையை பொதுஜனபெரமுன நிராகரித்துள்ளது.

 கொரோனா வைரசினை காரணம்காட்டி சிலர் தேர்தல்களை பிற்போட முயல்கின்றனர் என தெரிவித்துள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தேர்தலில் வெற்றிபெறமுடியாது என தெளிவாக தெரிந்துள்ளதால் இந்த முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் இடம்பெற்றால் தாங்கள் தோல்வியடைவார்கள் என்பது தெரிந்துள்ளதால் இந்த விடயத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர் என ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தோல்வியை எப்படி தவிர்ப்பது தேர்தல்கள் நடைபெறுவதை தடுப்பதன் மூலமே தோல்வியை தவிர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவர்கள் தேர்தல்கள் குறித்து அச்சமடைந்துள்ளனர்.நாங்கள் அந்தளவிற்கு செல்லமாட்டோம் ஆனால் மக்களையும் அவர்களது உடல்நலத்தையும் பாதுகாப்பது எங்களின் முக்கிய கரிசனைக்குரிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.