டிசெம்பரில் ஐ.தே.க.வின் தலைமையை ஏற்பதற்குத் தயார்

புதன் செப்டம்பர் 16, 2020

டிசம்பர் மாதமாகும் போது செயற்குழுவின் நம்பிக்கையை வென்றால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் என கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கட்சி செயற்குழு கூட்டத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன நேற்று முன்தினம் தெரிவு செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று கங்காராம விகாரையில் ஆசிர்வாதம் பெற்றதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பஅவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தான் கட்சிக்காக செய்யவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளதாகவும் நாட்டு மக்களின் நம்பிக்கையை மீண்டும் வெல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் அனைத்து தலைவர்களையும் ஒன்றிணைத்து எதிர்கால பயணத்தை ஆரம்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிலருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர்களும் கட்சியின் மீது கொண்டுள்ள நேசத்தினால் அவர்களுடன் இணைந்து செயற்பட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கட்சியை முழுமையாக புனரமைக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும்