டி.எஸ்.பி' யான தன் மகளை பார்த்து- "ரோயல் சல்யூட்" அடித்த காவல் ஆய்வாளரான தந்தை!

திங்கள் சனவரி 04, 2021

டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற தன் மகளுக்கு பெருமிதத்துடன் "ரோயல் சல்யூட்" அடித்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் தந்தை. இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்சமயம் வைரலாகி வருகிறது

ஆந்திரா காவல்துறையில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் சியாம் சுந்தரர், இவரது மகள் ஜெசி பிரசாந்தி, 2018ல் நடந்த காவலர் தேர்வில் வெற்றி பெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணி அடிப்படையில் பார்த்தால், தன் தந்தையை விட இவர்தான் உயர் அதிகாரி ஆவார்.

இந்நிலையில் திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெசி பிரசாந்தி. இவர் வருகையைக் கண்ட இவரது தந்தையான காவல் ஆய்வாளர் சாம் சுந்தர், பணியின் அடிப்படையில் அவருக்கு "ரோயல் சல்யூட்" அடித்தார். அங்கு கூடியிருந்த அனைவரும் இச்சம்பவத்தை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் அவர் கூறுகையில் வீட்டில் தான் தந்தை, மகள் உறவு, மற்றபடி பணி என்று வரும்போது தன் மகள் எப்பவுமே எனக்கு உயர் அதிகாரி தான் என்று கூறினார்.

இச்சம்பவமானது இணையதளத்தில் வைரலாகி அனைவராலும்  பகிரப்பட்டு வருகிறது.