தீபாவளி பண்டிகையை புறக்கணியுங்கள்!

வெள்ளி நவம்பர் 13, 2020

கொரோனா எனும் கொடுந்தொற்று 2020 இந்த ஆண்டு முழுவதும் மானுடசமூகத்தை உலுக்கி எடுத்துவிட்டது.

உலக முழுவதும் இறந்தவர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இன்னும் நோய்த்தொற்று குறையவில்லை. அதேபோல் உலகெங்கும் ஊரடங்குச் சட்டங்களும் நிபந்தனைகளோடு தொடர்கிறது.

மரணங்கள் மட்டுமின்றி பொருளாதார சிக்கலும் உலக அளவில் பாதிப்படைந்துவிட்டது. ஆகவே 2020 ஆண்டு சோக ஆண்டாகவே மாறிவிட்டதென்பது. நாம் யாவரும் அறிந்ததே! இந்த நிலையில் பொருளாதார இழப்புகள்..  தொழில் வணிகக் குழுமங்கள், வியாபாரிகள் மட்டுமின்றி சாதாரண ஏழைய எளிய மக்களையும் விட்டுவைக்கவில்லை.

இந்தியா முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி.. ஆனால் நாம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க வேண்டும். காரணம், கொரோனாவால் இறந்தவர்கள் இந்தியாவில் லட்சத்தை தொட்டுவிட்டது. அதேபோல் பொருளாதார நெருக்கடியும் மக்களை கடுமையாக பாதித்துவிட்டது. இந்நிலையில் தீபாவளி போன்ற மக்கள் பண்டிகையைக் கொண்டாடுவது. அபத்தமானது.

அது மட்டுமின்றி உலக சுகாதார  நிறுவனம்  ஓர் எச்சரிக்கை செய்துள்ளது கவனத்தில் கொள்ள வேண்டும். தீபாவளி போன்ற பண்டிகையில் வெடிவெடிப்பது நடைமுறை என்றாலும் அதில் ஆபத்து உள்ளது. காரணம், வெடியின் வெடிக்கப்படும் போது வெளியேற்றப்படும் கந்தக புகையின் ஊடாக கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. என்பதே.. உலக சுகாதார நிறுவனம் கூறும் காரணமாகும்.

அதனால் தான் இந்திய அரசு வெடிவெடிப்பதற்கும், வெடிவிற்பதற்கும் நிபந்தனை விதித்து கட்டுப்படுத்தியுள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை தீபாவளி என்பது. தமிழர் பண்டிகைக் கிடையாது.அது ஆரியர்கள் திணித்த பண்டிகை. நமது தமிழர் மரபு துக்கம் மட்டுமே அமைதியாக அனுசரிக்கும். ஆகவே நாம் துக்கம் அனுசரிப்போம் என்பது கொரோனாவால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளார்கள். இந்த நிலையில் நாம் புத்தாடை அணிந்து, வெடிவெடித்து பண்டிகையை கொண்டாடுவது இறந்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும்..

ஆகவே தீபாவளியை கேளிக்கைக் கொண்டாட்டமாக மாற்றுவதற்கு பதிலாக இறந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக  தீபாவளி பண்டிகை அன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவதே கொரோனாவால் இறந்தவர்களுக்கு நாம் செய்யும்  நினைவேந்தல் ஆகும்.

ஆகவே தீபாவளியை கொண்டாட்டப் பண்டிகையாக மாற்றாமல் இறந்த மக்களுக்கு தீபஒளியை ஏற்றி துக்கம் அனுசரிப்போம்.

இங்ஙனம்
சேது. கருணாஸ்.,ந்ம்.எல்.ஏ.,
தலைவர், முக்குலத்தோர் புலிப்படை