தீரமுடன் போராடிய எல்லைப்படை மாவீரர்கள் நினைவில்

புதன் நவம்பர் 25, 2020

எல்லைப்படை  மாவீரர்கள்

எல்லைத் திசையெங்கும் நிலையாகினர்- எங்கள் 

உரிமைக்கு பலம் தேடி வித்தாகினீர்

மகிழ்வோடு ஈழம் காணப் படையது சேர்ந்தீர்- வேங்கை

வீரரென விடுதலைக்கு  உயிர் கொடுத்தீர்

                                                                      -அன்பரசு 

 

 

ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் அது மக்கள் இயக்கமாக இடம் பெற வேண்டும். போராடுவோர் வேறாகவும் மக்கள் வேறாகவும் பிரிந்து நிற்கும் போது வெற்றி வாய்ப்புக்கள் அரிதாகக் கிடைக்கின்றன. உலக விடுதலை வரலாற்றில் மக்கள் பங்களிப்பின் சிறப்பை எம்மால் உணர முடியும். மக்களும் போராடுவோரும் ஒரேயணியாக நிற்கும் போது எந்த சக்தியாலும் அவர்களை வெல்ல முடியாது. மக்களின் அரசியல் வளர்ச்சியும், போராட்டம் பற்றிய விழிப்பும் மிகப் பெரிய பின்னணி சக்தியாக இடம்பெறுகின்றன. மக்களின் நேரடிப் பங்களிப்பு அதன் அடுத்த கட்டமாக அமைகிறது. அந்த நிலை வரும் போது மக்களும் போராளிகளும் ஒன்றாகி விடுகின்றார்கள்.

வியட்னாம் போரின் போது விவசாயிகள் ஒரு தோளில் கலப்பையையும் அடுத்த தோளில் துவக்கும் சுமந்த படி வயற்காட்டிற்குச் சென்றுள்ளார்கள். மக்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அவ் வேளையில் அவர்கள் போராட்டத்திலும் பங்களிப்புச் செய்தார்கள். எமது விடுதலைப் போரின் பரிணாம வளர்ச்சியாக எல்லைப் படையின் தோற்றத்தைக் கணிப்பிடலாம். எல்லைப் படையினருக்கு குடும்ப வாழ்வும் குடும்பப் பொறுப்பும் உண்டு. அவர்கள் பொது மக்களின் அங்கமாவர். ஏன்றாலும் அவர்களால் பார்வையாளர்களாகத் தூர நிற்க முடியவில்லை.  தேவை உணர்ந்து எல்லைப் படையில் இணைந்தார்கள். தீரமுடன் போராடினார்கள். மாவீரானர்கள் 

தலைவன் கண்கலங்க ஒரு போர்வீரன் சாவானாகில் அந்தச் சாவைத் தேடிப் பெற வேண்டும் என்று தமிழ் இலக்கியம் கூறுகின்றது. எல்லைப் படைவீரர்கள் இத் தகுதியைப் பெற்று விட்டார்கள். மனைவி, பிள்ளைகள், வாழ்க்கைப் பணி என்பவற்றை ஒரு புறம் வைத்து விட்டு அவர்கள் களமாட வந்தார்கள். தமது வரலாற்றுக் கடமையை உணர்ந்து அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். எமது எல்லைப்படை மாவீரர்களில் பெண்களும் இருக்கிறார்கள். தமிழ் இருக்கும் வரை அவர்கள் புகழ் பாட்டாகவும்  நூலாகவும் வெளிவரும்.  

1778 இல் நடந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் மொல்லி மெக்கோலி என்ற குடும்பப் பெண் பங்கு பற்றினாள். அவள் போராளியல்ல. பீரங்கிப் படையில் போராடிய கணவனுக்கு உதவ வந்தவள். ஒரு கட்டத்தில் அவளே பீரங்கியை இயக்கும் கட்டம் தோன்றியது. அமெரிக்கச் சுதந்திரப் போராட்டத்தின் கதாநாயகி என்ற சிறப்பு இப் பெண்ணுக்கு உண்டு. 

ஒரு இனம் ஒரு தேசமாக எழுச்சி அடைவதற்கும் சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைப்பதற்கும் மக்கள் சக்தி அடித்தளமாக அமைகின்றது. ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட்டம் மக்கள் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் போது சுதந்திரம் நிச்சயம் கிடத்தே தீரும். எல்லைப் படை மாவீரர்களின் தியாகம் ஒரு போதும் வீண் போக மாட்டாது. அவர்கள் பங்களிப்பு அளப் பெரியது. அவர்களுடைய வரலாற்றுப் பதிவை இதன் மூலம் வெளிப்படுத்துகின்றோம்.

 

​முதல் எல்லைப்படை மாவீரர்​

 

முதல் பெண் எல்லைப்படை மாவீரர்