தீயினில் எரியாத தீபங்கள் வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் !

செவ்வாய் அக்டோபர் 08, 2019

தீயினில் எரியாத தீபங்கள் வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் சட்டன் பகுதியில் நேற்று முன் தினம்  (6-10-19)  நடைபெற்றது. உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந் நிக்ழவில்  தமிழீழத் தேசியக் கொடியினை தென்மேற்க்கு பிராந்தியப் பொறுப்பாளர் திரு நமசிவாயம் வசந்தன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகச்சுடரினை லெப்.கேணல் - புலேந்தி அம்மானின் மகன் சீலன் அவர்கள் ஏற்றிவைத்தார் அதனைத் தொடர்ந்து லெப்.கேணல் புலேந்தி அம்மானின் மனைவி சுபா அவர்கள் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்ததுடன் மக்களும் மலர் வணக்கம், சுடர் வணக்கம் செய்து இந்த நிகழ்வு ஆரம்பமானது. 

எழுச்சிப் பாடல்களை மாதுலானி பெனான்டோ பாட, மாவீரர்களின் வரலாற்றை ஆங்கிலத்தில் மயூரி ஜெகன்மோகன் அவர்கள் நிகழ்த்தினார். நடனங்கள் செல்வி சகி பத்மலிங்கம், அக்சரா சிவசங்கர், ஜென்சிகா வின்சலாஸ், கிருஷ்ணி முகுந்தன், வாசுகி வாசுதேவன், சோபியா வாசுதேவன், அகர்ஷனா ஆனந்த்  ஆகியோர் நிகழ்த்தினர். கவிதையை சாமினி ராஜநாதன் அவர்களும் சிறப்புரையை திரு சுரேஸ்  (முன்னாள் மன்னார் மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர்) அவர்களும் நிகழ்த்தியதுடன் நிகழ்வு நிறைவு பெற்றது