டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது தொடர் பாலியல் புகார்!

வியாழன் மார்ச் 04, 2021

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ஆக இருந்த ராஜேஷ் தாஸ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்தார்.

இந்த புகாரை விசாரிக்க சிபிசிஐடிக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.

ராஜேஷ் தாஸ் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய டிஜிபி அந்தஸ்து அதிகாரி மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவும் அவர்கள் நேரில் சென்று கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.