திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்!

ஞாயிறு சனவரி 26, 2020

தி.மு.க.வின் முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

திமுக தலைமை கழகம் சார்பில் இன்று வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தி.மு.க.வின் முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.

முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்த டி.ஆர்.பாலு, தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவராக பொறுப்பு வகித்து வருவதால் அவருக்கு பதிலாக கே.என் நேரு நியமிக்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.