திமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை? அதிருப்தியில் அதிமுக!

புதன் மார்ச் 03, 2021

திமுகவுடனும் தேமுதிக பேசி வருவதாக கூறப்படுவதால், அக்கட்சி மீது அதிமுக அதிருப்தி அடைந்துள்ளது.

முன்னதாக சசிகலா சென்னை வந்த நிலையில், அவரை பிரேமலதா சந்திக்கப் போவதாக தகவல் வெளியானது, ஆனால், அவர் மறுத்தார்.

தற்போது அதிமுக கூட்டணியில் இருப்பதாக கூறிவரும் தேமுதிக தரப்பு, திமுகவுடனும் பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது. திமுக தரப்பில் தாங்கள் கோரும் இரட்டை இலக்க தொகுதிகளை தர ஒபு்புக் கொள்ளும்பட்சத்தில் அடுத்த கட்டமாக பேசலாம் என தேமுதிக தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தேமுதிகவின் இந்த நடவடிக்கைகள் அதிமுக தரப்பை அதிருப்தியடைய செய்துள்ளது. முன்னதாக, பிரேமலதா, தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதாக தெரிவித்து வந்தார்.

சமூக வலைதளத்தில் சுதீஷ் வெளியிட்ட பதிவில் விஜயகாந்தை முதல்வர் என்று குறிப்பிட்டிருந்தார். இவையும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது