திராட்சை தரும் நற்குணங்கள்!!

சனி பெப்ரவரி 16, 2019

தினமும் ஒரு பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தேவை இல்லாத கலோரிகள், கொழுப்பு எதுவும் இல்லாதவை பழங்கள்.

இது பலவித வைட்டமின்கள், தாதுக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக திராட்சை பழம் பல சத்துக்களை உள்ளடக்கி உள்ளது. திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன எனப் பார்ப்போம்.

*ஆண்டி ஆக்ஸிடண்ட்
திராட்சையில் பைடோ நியூட்ரியண்ட்ஸ் உள்ளன. உடல் தசைகளை பாதிக்கும் ஆபத்தான ஃபிரீ ராடிகிள்களை சரி செய்கிறது.

*வீக்கத்துக்கு எதிரானது
உடலில் எந்த பாகத்தில் வீக்கம் ஏற்பட்டாலும் அதனைக் கட்டுப்படுத்துகிறது.

*இருதயத்தை காக்கிறது
திராட்சையில் உள்ள பைடோ நியூட்ரியண்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான சத்துக்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

*புற்று நோய் தடுப்பு
லுகேமியா மற்றும் புற்றுநோய் உயிரிகள் வளர்ச்சியைத் தடுக்கும்.

*இளமை தோற்றம்
நுண் கிருமிகளை எதிர்க்கும் சத்துக்கள் திராட்சையில் உள்ளன. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். மேலும் வயதாவதைத் தடுக்க உதவும்.