டிரம்ப்பின் "ட்விட்டர் கணக்கு" முடக்கம் - குழுவிற்கு தலைமை தாங்கிய இந்திய பெண்!

அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டார்கள் டிரம்ப் ஆதரவாளர்கள். இந்த வன்முறைக்கு காரணம் டிரம்ப என உலகத் தலைவர்கள் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் டிரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கியது ட்விட்டர் நிர்வாகம். இதைப் பொருட்படுத்தாமல் தன்னுடையய உதவியாளரின் டிவிட்டர் கணக்கை கடன் வாங்கிக்கொண்டு டுவீட் போட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும் முற்றுகை மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியிட்ட காரணங்களால் ட்விட்டர் நிறுவனம் அதிபரின டிரம்ப்பின் கணக்கை முழுமையாக முடக்கியது.
இந்நிலையில் அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் விஜயா கடே என்றும், அவர் ஒரு இந்திய பெண் என தகவல் தெரியவந்து உள்ளது.
இந்தியாவில் பிறந்த விஜயா கடே தனது 3-வது வயதில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு குடிபெயர்ந்து உள்ளார். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைகழகத்தில் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை பட்டமும் நியூயார்க் பல்கலைகழகத்தில் சட்ட படிப்பும் முடித்து பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.