திருகோணமலை மாவட்ட செயலக அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கை!!

புதன் ஏப்ரல் 07, 2021

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தவறான கருத்துப் பரிமாற்றங்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்து திருகோணமலை மாவட்ட செயலக அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்று (புதன்கிழமை) மதிய உணவு வேளையில் காரியாலயத்திற்கு முன்பாக ஒன்று கூடிய அரச ஊழியர்கள் அமைதியான முறையில் சமூக இடைவெளியைப் பேணி பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அரசாங்க அதிபருக்கு எதிரான குறித்த செயலை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த அவர்கள் இவ்வாறான தவறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.