திருகோணமலை மாவட்டத்தில் 22 புதிய தொற்றாளர்கள்

ஞாயிறு சனவரி 17, 2021

திருகோணமலை மாவட்டத்தில் 22 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

இன்று (17) மாலை 4 மணியளவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில்,

கிண்ணியாவில் கடந்த 12 மணித்தியாலயத்தில் புதிய கொரோனா தொற்றாளர் 9 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளதாகவும் இவ்வாரம் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 48 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று சிவப்பு வலயத்தில் திருகோணமலை மற்றும் கிண்ணியா முன்னிலையில் உள்ளது எனவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் மொத்த கொரோனா தொற்றாளர் 69 பேர் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 156 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட நிலையில் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.