திருகோணமலையில் புதிய யாத்திரை மண்டபம், விநாயகர் விக்கிரகத்திற்கு கும்பாபிஷேகம்

வெள்ளி ஜூலை 12, 2019

தமிழர் தாயகத்தின் தலைநகர் திருகோணமலையில் நகரசபைக்கு அருகாமையில். புதிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு அக் கட்டிடத்தில் கட்டப்பட்ட விநாயகப் பெருமானின் மிகவும் உயரமான விக்கிரகத்திற்கு இன்று (12) கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 

இந்தப் புதிய மண்டபம் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதருகின்ற பக்தர்களின் யாத்திரை மண்டபமாகவும் சித்த சுவாதீனமற்ற சிறார்களின் கல்விக்கூடமாகவும் இயங்கும். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இம்மண்டபம் திறந்துவைக்கப்படும். 

சித்த சுவாதீனமற்ற சிறார்களின் பாடசாலையாகவும் இயங்கும்...

திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினால் இந்தக் கட்டிடம் நிர்வகிக்கப்படும். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் இக்கட்டிடத்தை தனது சொந்தச் செலவில் நிர்மாணித்துக் கொடுத்துள்ளார். 

சித்த சுவாதீனமற்ற சிறார்களின் பாடசாலையாகவும் இயங்கும்...

திருகோணமலையில், தமிழ் மக்களின் வரலாறுகள் சிதைக்கப்படுவதுடன், வரலாற்றை மாற்றி எழுத சிங்களத் தலைமைகள் முற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இப்புதிய கட்டிடம் அமைக்கப்பட்டமையும் அங்கு விநாயகர் விக்கிரகம் தாபிக்கப்பட்டு கும்பாபிசேகம் இடம்பெற்றமையும் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.