திருமண நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு 4 பேர் பலி-ஆப்கானிஸ்தான்

வெள்ளி ஜூலை 12, 2019

ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் நகரில் பச்சீரகம் பகுதியில் உள்ளூர் குடிப்படை தளபதி ஒருவரின் இல்ல திருமண விழா இன்று காலை நடைபெற்றது.  இந்நிலையில், திடீரென அங்கு குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.  40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இந்த சம்பவத்திற்கு எந்தவொரு தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.  

ஆனால்,ஐ.எஸ்.கே. என்ற ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் கிளை அமைப்பு (ரஷ்யாவால் தடை செய்யப்பட்டது) மற்றும் தலீபான் இயக்கம் ஆகியவை இங்கு தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றன.