திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல்!

வியாழன் செப்டம்பர் 12, 2019

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

திலக் வீரசிங்க தம்பதியினரின் மகளான 22 வயதுடைய விமினி வீரசிங்கவை இன்றைய தினம் (12.09.2019) 33 வயதான நாமல் ராஜபக்க்ஷ கரம்பிடிக்கின்றார்.

கொழும்பு கங்காராம விகாரையில் நாமல் ராஜபக்ஷ மற்றும் லிமினி வீரசிங்க ஆகியேரின் திருமணம் இடம்பெறுகின்ற நிலையில், திருமண வரவேற்பு நிகழ்வு வீரகெட்டியவிலுள்ள கால்டன் இல்லத்தில் இடம்பெறுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.